தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை
பொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி பஸ் நிறுத்தம் எதிரே தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மற்றும் மூலங்குடி, சுல்லாம்பட்டி, கோனம்பட்டி, பொன்-புதுவளவு, புறக்கரைப்பட்டி பங்காளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு உறுப்பினர் நல்லதம்பி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோவில் நிலங்களை விற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு சொந்தமான வெள்ளி, தங்க நகைகளை மீட்டு அறநிலையத்துறைக்கு சொந்தமாக்க வேண்டும், கோவில் பெயரை சொல்லி தனி ஆதிக்கம் செலுத்துகின்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story