வேணுகோபாலசுவாமி கோவிலில் உறியடிஉற்சவம்
விக்கிரவாண்டி வேணுகோபாலசுவாமி கோவிலில் உறியடிஉற்சவம் நடைபெற்றது.
விழுப்புரம்
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி மெயின்ரோட்டில் பிரசித்தி பெற்ற வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் உறியடி உற்சவம் நடைபெற்றது. இதனை விழுப்புரம் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் தொடங்கி வைத்தார். இதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உறியடித்தனர். முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் பஜனை பாடல்கள் மற்றும் கண்ணன், ராதை பாடல்களை பாடி நடனமாடினர். இதற்கான ஏற்பாடுகளை யாதவ மகா சபை சார்பில் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story