நல்ல ஆரோக்கியம் பெற உதவிடும் மிதிவண்டி பயணத்தை முடிந்த அளவு பயன்படுத்துங்கள் - ஓ.பன்னீர்செல்வம்
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
உலக மிதிவண்டி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நல்ல ஆரோக்கியம் பெற உதவிடும் மிதிவண்டி பயணத்தை முடிந்த அளவு பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த, சுற்றுப்புறச்சூழலுக்கு பொருத்தமான, எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, நீடித்த போக்குவரத்தை ஊக்குவிக்கும் மிதிவண்டி பயன்பாடு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் 3-ஆம் நாள் "உலக மிதிவண்டி தினமாக" கொண்டாடப்படுகிறது.
உலக மிதிவண்டி தினம் ஆகிய இந்நாளில், உடல் பருமன், சோம்பல், மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்று நல்ல ஆரோக்கியம் பெற உதவிடும் மிதிவண்டி பயணத்தை அனைவரும் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.