வைகோ உருவபொம்மை எரித்த வழக்கு: தி.மு.க.வினர் 46 பேர் விடுதலை


வைகோ உருவபொம்மை எரித்த வழக்கு: தி.மு.க.வினர் 46 பேர் விடுதலை
x

வைகோ உருவபொம்மை எரித்த வழக்கில் தி.மு.க.வினர் 46 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

சேலம்

மேட்டூர்:

மேட்டூர் பஸ் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உருவ பொம்மையை எரித்ததாக மேட்டூர் நகர தி.மு.க. செயலாளர் காசி விஸ்வநாதன் உள்பட தி.மு.க.வினர் 46 பேர் மீது மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை மேட்டூர் குற்றவியல் நீதிமன்ற எண் 1-ல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் பத்மபிரியா, மேட்டூர் நகர தி.மு.க. செயலாளர் காசி விஸ்வநாதன் உள்பட 46 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.


Next Story