வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது


வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது
x

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்தவரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வண்டலூர் உயிரியல் பூங்கா விருந்தினர் இல்லம் அருகே இரும்பு கேட்டின் மீது திடீரென ஒருவர் ஏறி குதித்து வண்டலூர் பூங்காவுக்குள் நுழைந்து ஓடினார். இதை பார்த்த அங்கு இருந்த ஊழியர்கள் உடனடியாக அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்த போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த பூங்கா வனச்சரகர் ஹரி ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஓட்டேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் விசாரித்த போது அவர் நாகை மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 52) என்பது தெரியவந்தது. இது குறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரியல் பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்த பாலசுப்பிரமணியத்தை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story