வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
x

காரைக்குறிச்சியில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையில் 5 சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 368 பெண்கள் உள்பட 714 பேருக்கு சிகிச்சை அளித்தனர். சித்த மருத்துவ பகுதி தனியாக செயல்பட்டது. முகாமில் 187 பேருக்கு ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 23 கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. 31 பேருக்கு இ.சி.ஜி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணி மற்றும் வளரிளம் பெண்களுக்கான உணவு பழக்க வழக்கங்களை விளக்கும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை, கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், தலைமை ஆசிரியர் கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story