வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ரத்து


வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ரத்து
x
தினத்தந்தி 9 Dec 2022 1:40 AM IST (Updated: 9 Dec 2022 12:46 PM IST)
t-max-icont-min-icon

வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

திருச்சி

வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காஸ்டல் ராக்-வாஸ்கோடகாமா ரெயில் நிலையங்களுக்கு இடையே தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 17315) வருகிற 12-ந்தேதி மற்றும் 19-ந்தேதியும், வேளாங்கண்ணியில் இருந்து வாஸ்கோடகாமா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 17316) வருகிற 13-ந்தேதி மற்றும் 20-ந்தேதியும் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story