வி.சி.க. கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
கள்ளக்குறிச்சி அருகே வி.சி.க. கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் நடப்பட்டு அதில் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிலையில் உரிய அனுமதியில்லாமல் கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வி.சி.க.கொடி கம்பத்தை அகற்ற வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள், அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் தங்களது வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கட்டப்பட்டுள்ள வி.சி.க. கொடி கம்பத்தை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story