கோவிலில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வேல்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கோவிலில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வேல்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

மேல்மலையனூர் அருகே கோவிலுக்குள் புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள வேல்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே பெருவளூர் கிராமத்தில் பழமைவாய்ந்த கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அப்போது மேள, தாளத்துடன் பஞ்சலோகத்தினால் ஆன வேல் மற்றும் 25-க்கும் மேற்பட்ட செம்பு வேல்கள், 20-க்கும் மேற்பட்ட இரும்பு வேல்களை பக்தர்கள் வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.

வேல்கள் திருட்டு

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பஞ்சலோக வேல் மற்றும் செம்பு வேல் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது பற்றிய தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவம் நடந்த கோவிலுக்கு விரைந்து சென்று வேல்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வேல்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story