வேலூர்: ரூ.1 கோடியில் எம்.ஜி.ஆர் க்கு கோவில் - அடிக்கல் நாட்டப்பட்டது...!


வேலூர்:  ரூ.1 கோடியில் எம்.ஜி.ஆர் க்கு கோவில் - அடிக்கல் நாட்டப்பட்டது...!
x

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் க்கு ரூ.1 கோடி செலவில் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்த ஜே.வி‌.ஆர் வெங்கட்ராமன், முன்னாள் எம்.எல்.ஏ. ரகுபதியின் மகன் டி.ஆர். முரளி, கே. வி குப்பம் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் சீனிவாசன் மற்றும் கிராம மக்கள் இணைந்து ஸ்ரீ ராமச்சந்திரா என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கி உள்ளனர்.

இந்த அறக்கட்டளை சார்பில் கரசமங்கலம் ஊராட்சி ரகுபதி நகரில் எம்.ஜி.ஆர் க்கு கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது .இதில் திரி சக்தி ஸ்ரீ வராக குருஜி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். சுமார் 80 சென்ட் நிலத்தில் கட்டப்படும் இந்த கோவிலில் எம்.ஜி.ஆர் க்கு வெண்கலச் சிலை வைக்கப்பட உள்ளது. மேலும் திருமணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த கோவில் கட்டப்பட உள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க.பிரமுகர் டி.ஆர். முரளி கூறுகையில்;

எனது தந்தை ரகுபதி எம்.ஜி.ஆரால் தான் எம்.எல்.ஏ.ஆனார். எம்.ஜி.ஆரால் தான் எங்கள் குடும்பம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது .இந்த நன்றி மறக்காத வகையில் எம்.ஜி.ஆர் க்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம் .இதில் ஏழை மக்கள் திருமணம் செய்யும் வசதிகள் மற்றும் அமர்ந்து சாப்பிடும் வகையில் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இது பொதுமக்கள் சேவைக்காக மட்டுமே செய்யப்படுகிறது என்றார்.


Next Story