வெம்பக்கோட்டை அணை நீர்மட்டம் உயர்வு


வெம்பக்கோட்டை அணை நீர்மட்டம் உயர்வு
x

ெதாடர்மழையினால் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

விருதுநகர்

போதிய மழை இல்லாததால் சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் குறைந்து 9 அடியாக இருந்தது.

இந்தநிலையில் ராஜபாளையம் பகுதியில் தொடர் மழை காரணமாக வைப்பாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வெம்பக்கோட்டை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் தற்போது 1 அடி உயர்ந்து நீர் மட்டம் 10 அடியாக உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் வெம்பக்கோட்டை அணையை நம்பி தான் உள்ளனர். இந்த அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் அப்பகுதி மக்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும்.இந்தநிலையில் இங்கு போதிய மழை இல்லாததால் அணையின் நீா்மட்டம் 9 அடியாக இருந்தது. தற்போது பெய்த மழையின் காரணமாக 1 அடி உயர்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயருவதுடன், தட்டுப்பாடின்றி குடிநீரும் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story