கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரதம்


கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரதம்
x

பாளையங்கோட்டையில் கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில், பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 6-வது ஊதியக்குழுவில் வழங்கப்படாத நியாயமான ஊதியத்தை வழங்க வேண்டும். முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்தகட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட செயலாளர் மாரி வெங்கடேஷ், ஆழ்வார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மனோகரன், தென்காசி மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, கன்னியாகுரி ரெய்மாண்ட் சிங், விருதுநகர் ஜெயகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, மாநில செயலாளர் பரீத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் 5 மாவட்டங்களை சேர்ந்த கால்நடை ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story