விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பு; பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வருகை தந்தார் நடிகர் விஜய்


விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பு; பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வருகை தந்தார் நடிகர் விஜய்
x

நடிகர் விஜய் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார்.

சென்னை,

விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார். அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார்.

சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்புக்காக நடிகர் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வருகை தந்தார். இந்த சந்திப்பில் மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை வழங்குவார் எனவும் சொல்லப்படுகிறது


Next Story