கிராம நிர்வாக அலுவலரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


கிராம நிர்வாக அலுவலரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x

கிராம நிர்வாக அலுவலரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ருத்ரன் (வயது 32). இவர் பொன்னேரி அருகே உள்ள திருவேங்கிடாபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார். ருத்ரன் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவிதாவிற்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் உள்ள மின் விசிறியில் கவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கவிதாவின் தாயார் சுசிலா பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story