திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்


திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்

மீஞ்சூர் ஒன்றியத்தை சேர்ந்த வன்னியப்பாக்கம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாபஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். பொன்னேரி எம்.எல்.ஏ துரைசந்திரசேகர் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பொதுமக்கள் கூறிய குறைகளை கேட்டறிந்த கலெக்டர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, கவுன்சிலர் பானுபிரசாத் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் வழுதிகைமேடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சோழவரம் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சுடர்விழி தலைமை தாங்கினார். பெருங்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்வீட்டிகோபி, ஒரக்காடு ஊராட்சி மன்ற தலைவர் நீலாசுரேஷ், காரனோடை ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் அரசு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காட்டூர் ஊராட்சி மன்றத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றதில் தலைவர் செல்வராமன் தலைமை தாங்கினார்.

அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் சுகந்திவடிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் முன்னிலை வகித்தார். இதில் அரசு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மெதூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் சீனிவாசன், தேவதானம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிஎட்டியப்பன் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் உளுந்தை எம்.கே.ரமேஷ் தலைமையில் நடந்தது. இதில் துணைத் தலைவர் வசந்தா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார்.

அதேபோல கடம்பத்தூர் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. சிற்றம்பாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் ரமணி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் ஜெயந்தி சுயம் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. கீழச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிகலா தேவா தலைமையில் நடைபெற்றது.

திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரகுப்பம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது, கன்னிகாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், கே.ஜி. கண்டிகை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சௌமியா ராஜசேகர் தலைமையிலும், முருக்கம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி பொன்னுசாமி தலைமையிலும், நல்லாட்டூர் கிராமத்தில் தலைவர் கலையரசி கமலநாதன் தலைமையிலும், பொன்பாடி கிராமத்தில் தலைவர் சுஜாதா தனசேகர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாமண்டூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அம்சா தலைமையில் கிராம சபை நடைபெற்றது.


Next Story