வில்லாபுரம், பசுமலை பகுதியில் நாளை மின்தடை


வில்லாபுரம், பசுமலை பகுதியில் நாளை மின்தடை
x

வில்லாபுரம், பசுமலை பகுதியில் நாளை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மதுரை

மதுரை,

வில்லாபுரம், பசுமலை பகுதியில் நாளை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

எல்லையூர்

சமயநல்லூர் கோட்டம் வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் தெத்தூர் பீடரில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே எல்லையூர், ராமராஜபுரம், செம்மினி பட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன் கொட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம், தாடகை நாச்சிபுரம் ஆகிய பகுதிகள் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

வில்லாபுரம்

வில்லாபுரம் துணைமின் நிலையம் மற்றும் பசுமலை உபமின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே வில்லாபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாயின் மேற்கு பகுதிகள், எப்.எப். ரோடு , வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர், ஜெய்ஹிந்துபுரம் 1-வது மற்றும் 2-வது மெயின் வீதி, பாரதியார்ரோடு, ஜீவாநகர் 1-வது மற்றும் 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல்நகர், சோலையழகுபுரம் 1-வது முதல் 3-வது தெரு, அருணாசலம் பள்ளிப் பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே. புரம், சுப்பிரமணியபுரம் பகுதிகள், சுந்தர்ராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் பகுதிகள், ராஜம்ரோடு, மீனாட்சிரோடு, நேருநகர், டி.வி.எஸ். நகர், பொன்மாரி நகர், அழகப்பா நகர் மெயின்ரோடு, எல்.எல். ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

பசுமலை

மேலும் பசுமலை உபமின் நிலையத்திற்குட்பட்ட பைக்கரா மேட்டுத்தெரு, அம்பேத்கர் நகர், அண்ணாநகர், தியாகராஜா காலனி, கோபால்சாமி நகர், பசுமலை மெயின் ஆர்ச் வரை, டேனியல் தெரு, பி.ஆர்.சி. பின்புறம், பசுமலை சர்ச், ஜோன்ஸ்புரம், பசுமலை ஜி.எஸ்.டி. ரோடு, பசுமலை மூட்டா காலனி, விநாயகநகர், ராயப்பன் நகர், பெத்தானி நகர், கோபாலபுரம், முனியாண்டிபுரம், சீனிவாசா கிராமம், ஆதிசிவன் நகர், மொட்டமலை, ஜோசப் நகர், எம்.எம்.டபிள்யூ.சி. காலனி, விளாச்சேரி கிராமம், திருநகர் 3 முதல் 5-வது ஸ்டாப், உச்சாமோடு பாலுச்சாமி தெரு, மருதுபாண்டியர் தெரு, மங்களம்மாள் சாலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார்.


Related Tags :
Next Story