கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்


கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்
x

கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பலரும் குடும்பத்துடன் சொந்த ஊர் புறப்பட்டு செல்கின்றனர்.

இதன் காரணமாக நேற்று இரவே கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும், போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், கோயம்பேட்டில் இன்று காலையும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கோயம்பேடு, பெருங்களத்தூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், சொந்த ஊர் செல்வோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


Next Story