விருதுநகர் கலெக்டர் காரை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு


விருதுநகர் கலெக்டர் காரை  ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு
x

விருதுநகர் கலெக்டர் காரை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை வாகனத்தால் கடந்த 2013-ல் விபத்து ஏற்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி விருதுநகர் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் முறையிட்டனர். இது தொடர்பான வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ. 65 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனையடுத்து ரூ.28 லட்சம் மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில் மீதி தொகை ரூ.37 லட்சம் செலுத்தவில்லை.

எனவே இந்த வழக்கில், கலெக்டர் காரை ஜப்திசெய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நேற்று கோர்ட்டு ஊழியர் வேல்முருகன், கலெக்டர் காரை ஜப்தி செய்ய கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது..

இதுபற்றிய தகவல் கலெக்டர் ஜெயசீலனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுெதாடர்பாக கலெக்டரின் சட்டப்பணிகள் பிரிவு உதவியாளர் சிக்கந்தர்பீவி கோர்ட்டுக்கு சென்றார். நிலுவை இழப்பீட்டு தொகை வழங்க கால அவகாசம் வழங்குமாறு மாவட்ட அரசு வக்கீல் மூலம் முறையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமானந்தகுமார், மாவட்ட நிர்வாகம் விபத்து இழப்பீட்டுத்தொகை நிலுவையை வழங்க கால அவகாசம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கலெக்டரின் கார், ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.


Related Tags :
Next Story