விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - மேலும் ஒருவர் கைது


விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - மேலும் ஒருவர் கைது
x

பட்டாசு ஆலையின் மேலாளர் ஜெயபாலன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமுதேவன்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் நேற்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார், பட்டாசு ஆலையின் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேற்று பட்டாசு ஆலையின் போர்மேன் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து இன்றைய தினம் ஆலையின் மேலாளர் ஜெயபாலன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளர் விக்னேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.




Next Story