7 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் விருதுநகர் நிறைகுளத்து அய்யனார் கோவில் திருவிழா


7 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் விருதுநகர் நிறைகுளத்து அய்யனார் கோவில் திருவிழா
x

விருதுநகர் நிறைகுளத்து அய்யனார் கோவில் திருவிழா 7 வருடங்களுக்குப் பின் பூஜைகளுடன் தொடங்கியது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் செம்பட்டி கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோவிலில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகு விமரிசையாக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழாவை நடத்த முடியாது சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து 7 ஆண்டுகளுக்குப் பின் தற்போது நிறைகுளத்து அய்யனார் கோவில் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் நாளான இன்று, காவல் தெய்வங்களுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.


Next Story