வண்டலூர் உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்காவை காண இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி - நிர்வாகம் தகவல்


வண்டலூர் உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்காவை காண இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி - நிர்வாகம் தகவல்
x

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்காவை காண இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட 7 பார்வையாளர்கள் காணும் இருப்பிடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரவு விலங்குகள் இருப்பிடம், பாம்புகள் இருப்பிடம், சிறுவர் பூங்கா பயோ சென்டர், உட்சென்று காணும் பறவைகள் இல்லம் போன்ற 4 பார்வையிடும் இடங்கள் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டன.

இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை கவரக்கூடிய இடமான வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. பார்வையாளர்கள் அதனை பார்வையிடலாம். இந்த தகவல் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story