ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடிக்கு விவேகானந்தர் சிலை பரிசு


ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடிக்கு விவேகானந்தர் சிலை பரிசு
x

ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக விவேகானந்தர் சிலை வழங்கப்பட்டது.

சென்னை,

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, ஹெலிகாப்டரில் மூலம் நேப்பியர் பாலம் அருகிலுள்ள அடையாறு ஐ.என்.எஸ். வளாகம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்று, சென்னை- கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் மாலை 4.25 மணி அளவில் சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தைச் சென்றடைந்தார். அங்கு ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக விவேகானந்தர் சிலை வழங்கப்பட்டது.



1 More update

Next Story