சென்னை தியாகராய நகரில் நடை மேம்பாலம் - அக்டோபரில் திறக்கப்படும் என தகவல்


சென்னை தியாகராய நகரில் நடை மேம்பாலம் - அக்டோபரில் திறக்கப்படும் என தகவல்
x

நடை மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் உள்ள தியாகராய நகர் பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் இங்கு அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் மற்றும் மாம்பலம் ரெயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

சுமார் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் தற்போது 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், வரும் அக்டோபர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடை மேம்பாலம் திறக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story