காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவிக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? போலீசார் விசாரணை

காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவிக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிஒருவர் வயிற்று வலி காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பாய்லர் ஆலை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவியை கடந்த ஒரு மாதமாக பின்தொடர்ந்த மர்ம நபர் கடந்த 11-ந் தேதி அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 12-ந் தேதி மாலை கல்லூரி முடித்து அவர் வீடு திரும்பியபோது, வழியில் 3 மர்மநபர்கள் வழிமறித்து அவரை மிரட்டி குளிர்பானத்தில் விஷம் கலந்து கட்டாயப்படுத்தி குடிக்க கொடுத்ததாகவும், அதனை குடித்ததிலிருந்து அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் அந்த மாணவி டாக்டரிடம் கூறியதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story