வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு


வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
x

வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் வைகையாற்றில் உயர்மட்ட பாலத்தின் அருகே படுகை அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த படுகை அணையின் அருகே அருப்புக்கோட்டை, திருப்புவனம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கான குடிநீர் திட்டங்கள் செயல்படுகின்றன. வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் படுகை அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதன் மூலம் இப்பகுதியில் செயல்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகளுக்கு நீர் ஆதாரம் கிடைத்து வந்தது. இந்த நிலையில் வைகை அணை பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததாலும், தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதாலும் வைகை அணை மீண்டும் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை, விரகனூர் வழியாக திருப்புவனம் படுகை அணையை கடந்து ராமநாதபுரம் சென்றது. நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் வைகை ஆற்றின் இருகரையில் உள்ள தென்னந்தோப்புகள், விவசாய நிலங்கள் பயன்பெறும். நீர்நிலைகளில் நிலத்தடிநீர் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.


Next Story