சென்னையில் 19 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது..! நாளை மாலைக்குள் அவை அகற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


சென்னையில் 19 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது..! நாளை மாலைக்குள் அவை அகற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x
தினத்தந்தி 9 Dec 2023 4:01 PM GMT (Updated: 9 Dec 2023 4:02 PM GMT)

சென்னையில் தினசரி 4,600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்

சென்னை,

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது,

சென்னையில் 19 இடங்களில் இன்னும் மழைநீர் அகற்றப்படாமல் உள்ளது. நாளை மாலைக்குள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குப்பைகளை அடுத்த 2 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களில் 20,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன .சென்னையில் தினசரி 4,600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

முழுமையாக சென்னை நகரம் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. ஒரு சில இடங்களைத் தவிர, மற்ற இடங்களுக்கும் தேவையான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்து வந்த 2500 மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். திங்கள்கிழமைக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . என்றார்.


Next Story