மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 2,049 கன அடியாக சரிவு


மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 2,049 கன அடியாக சரிவு
x
தினத்தந்தி 7 July 2022 9:02 AM IST (Updated: 7 July 2022 11:30 AM IST)
t-max-icont-min-icon

அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சேலம்,

மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு 2 ஆயிரத்து 108 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 2 ஆயிரத்து 49 கன அடியாக வந்து குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 100.95 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று நீர்மட்டம் 100.27 அடியாக சரிந்துள்ளது.மேட்டூர் அணையில் தற்போது 65.19 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.


Next Story