ஒகேனக்கலில் நீர்வரத்து 3 மடங்கு குறைவு - சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை


ஒகேனக்கலில் நீர்வரத்து 3 மடங்கு குறைவு - சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை
x

ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி,

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 48 மணி நேரத்திற்கு முன்பு 2 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது நீர்வரத்து சுமார் 3 மடங்கு குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக உள்ளது.

இதனிடையே நீர்வரத்து குறைந்தாலும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடரும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தொடர்ந்து 9 நாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story