நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதில் கர்நாடக அரசு, மத்திய அரசை கண்டித்தும், காவிரி நதி நீர் உரிமையை மீட்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.


Next Story