'உதயநிதி அல்ல... அவரது மகன் வந்தாலும் நாங்கள் வாழ்க என்று தான் சொல்வோம்' - அமைச்சர் கேஎன் நேரு
‘உதயநிதி அல்ல... அவரது மகன் வந்தாலும் நாங்கள் வாழ்க என்று தான் சொல்வோம்’ என்று அமைச்சர் கேஎன் நேரு கூறினார்.
சேலம்,
சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கேஎன் நேரு பேசுகையில், தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் நாங்கள் சாதாரண ஆள். எங்களை எல்லாம் உருவாக்கிய கட்சி, இயக்கம் (திமுக) அந்த குடும்பம் அந்த தலைவர் (கருணாநிதி), எண்ணற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கியுள்ள இயக்கம் (திமுக). அவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் நாங்கள் யாருக்கு விசுவாசமாக இருப்போம்.
உதயநிதி அல்ல... அவரது மகன் (இன்பநிதி) வந்தாலும் நாங்கள் வாழ்க என்று தான் சொல்வோம்... அது தான் எங்களுடைய எண்ணம். எனவே எங்களுக்கு வாரிசு என்று காட்டியெல்லாம் நீங்கள் எங்களை மிரட்டி விட முடியாது.
அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு தருகிற ஒரே இயக்கம் திமுக மட்டும் தான்' என்றார்.
Related Tags :
Next Story