வானிலை மையத்தின் எச்சரிக்கை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல அனுமதி மறுப்பு
கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படாது என ராமேஸ்வரம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம்,
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நாளை 45 கி.மீ. முதல் அதிகபட்சமாக 60 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நாளை கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படாது என ராமேஸ்வரம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும் விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story