வார இறுதி நாட்கள் - சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என அறிவிப்பு


வார இறுதி நாட்கள் - சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என அறிவிப்பு
x

சுற்றுலா அட்டை பெற்று மெட்ரோவில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற வற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.இதனால் தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோ ரெயிலில் ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரூ.100 செலுத்தி சுற்றுலா அட்டை பெற்று மெட்ரோவில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம். ரூ.150 செலுத்தி ரூ.100 சுற்றுலா அட்டை பெற்று திருப்பி செலுத்தியவுடன் ரூ.50 வைப்பு தொகை தரப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story