தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ரதயாத்திரைக்கு வரவேற்பு


தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ரதயாத்திரைக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகை வந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ரதயாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

நாகப்பட்டினம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கன்னியாகுமரியில் தொடங்கி புதுடெல்லி வரை நாடு தழுவிய ரதயாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 5-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த ரதயாத்திரை நேற்று நாகை வந்தது. பின்னர் நாகை அவரித்திடலில் ரதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். அப்போது நாகை மாலி எம்.எல்.ஏ. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். பின்னர் மயிலாடுதுறை வழியாக அக்டோபர் மாதம் 5-ந்தேதி டெல்லியை சென்றடையும் வகையில் ரதயாத்திரை தொடங்கி வைக்கப்பட்டது.

1 More update

Next Story