மாலை அணிவித்து மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு


மாலை அணிவித்து மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 15 Jun 2023 1:07 AM IST (Updated: 15 Jun 2023 5:47 PM IST)
t-max-icont-min-icon

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது.மாலை அணிவித்து மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர்.

திருச்சி

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது.மாலை அணிவித்து மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர்.

பள்ளிகள் திறப்பு

கோடை வெயில் காரணமாக பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

இது தவிர எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் குழந்தைகளுக்கும் வகுப்பு நடைபெற்றது. சிறு குழந்தைகளுக்கு வகுப்புகள் தொடங்குவதால் கல்வித்துறை அறிவுறுத்தல் பேரில் அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினர்.

ஆடல்-பாடல்

திருச்சியில் மாநகராட்சி பள்ளிகள், அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள், மழலையர் பள்ளிகளுக்கு முதன் முதலாக வரும் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். சில பள்ளிகளில் ஆரத்தி எடுத்தும் ஆடல், பாடலுடன் மலர் தூவி ஆசிரியர்கள் வரவேற்றனர். சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அழுது அடம்பிடித்ததையும் காண முடிந்தது. பெற்றோரின் காலை பிடித்து அழுதும், தரையில் படுத்தும் உருண்டனர். இதைக்கண்ட ஆசிரியர்கள் அந்த குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை கொடுத்து சமாதானபடுத்தினர்.

காலை சிற்றுண்டி

மாணவ-மாணவிகள் புதிய சீருடை அணிந்து வந்தனர். முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கப்பட்டன. மாநகராட்சி மற்றும் அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வகுப்பு ஆசிரியர்களிடம் மாணவ-மாணவிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் கோபமுடன் நடந்து கொள்ள கூடாது. மாணவர்கள் பாடத்தில் எந்த சந்தேகம் கேட்டாலும் தயக்கமின்றி தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதேபோல் மணப்பாறை, திருவெறும்பூர், துவாக்குடி, துறையூர், தா.பேட்டை, லால்குடி, முசிறி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆர்வமுடன் அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தனர்.


Next Story