காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்


காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
x

காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையேற்று பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கூட்டத்தில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கை, கால் இயக்க குறைபாடுள்ள 7 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டது. மேலும் கேட்புதிறன் குறைபாடுள்ள 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,900 மதிப்புள்ள காதொலி கருவிகள் மற்றும் காஞ்சீபுரம் வட்டம் நாியம்புதூர் கிராமத்தை சோ்ந்த மீனா என்ற பழங்குடி இனத்தை சோ்ந்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் எந்திரத்தை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) இரவிச்சந்திரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கு.பிரகாஷ் வேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story