சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - அறிக்கை அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு


சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - அறிக்கை அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
x

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து நடிகை குஷ்பு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது. தன்னை அவதூறாக பேசியதாக குஷ்பு அளித்த புகாரின் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குஷ்பு குறித்து அவதூறாக பேசிய புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூன்று நாட்களுக்குள் தெரிவிக்குமாறு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

1 More update

Next Story