குரூப்-5ஏ தேர்வு முடிவு எப்போது? - தேர்வர்கள் எதிர்பார்ப்பு
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே மாதத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னை,
குரூப்-5ஏ பதவிகளில் பிரிவு அலுவலர், உதவியாளர் ஆகிய 170-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.
அதன்படி, இந்த பணியிடங்களுக்கு 383 பெண்கள் உள்பட சுமார் 1,114 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களுக்கான எழுத்து தேர்வு சென்னையில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 18-ந் தேதி நடந்தது.
அறிவிப்பு வெளியிடப்பட்ட போது தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே மாதத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தேர்வு முடிந்து 7 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும், இதுவரை தேர்வு முடிவு வெளியாகவில்லை என்றும், இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டால், முறையான தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் தேர்வர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.