கள்ளக்குறிச்சி பள்ளி எப்போது திறக்கப்படும்? - பள்ளி நிர்வாகம் தகவல்


கள்ளக்குறிச்சி பள்ளி எப்போது திறக்கப்படும்? - பள்ளி நிர்வாகம் தகவல்
x

கள்ளக்குறிச்சி பள்ளி இன்னும் 10 நாட்களுக்குள் திறக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளன. கனியாமூர் பள்ளி மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கடந்த 17-ந்தேதி கலவரத்தில் முடிந்தது. இதில் வகுப்பறையில் இருந்த பொருட்கள் சேதமானதால் மீண்டும் பள்ளியைத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பிற மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியைத் திறக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சக்தி மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. அந்த பள்ளியில் படிக்கும் 3 ஆயிரத்து 478 மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுள்ளனர்.

சேதமடைந்த வகுப்பறைகள், மாணவர்கள் அமரும் இருக்கைகள், கரும்பலகைகள் உள்ளிட்டவையும் சீர் செய்யப்பட்டு இன்னும் 10 நாட்களுக்குள் பள்ளி திறக்கப்படும் என்று சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story