திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு பாழாகிவிடும் - ஜெயக்குமார் பேட்டி


திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு பாழாகிவிடும் - ஜெயக்குமார் பேட்டி
x

இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் ஜாமினில் இன்று வெளியே வந்தனர். அவர்களை ஜெயக்குமார் இன்று கட்சியினருடன் வரவேற்றார்

சென்னை,

அதிமுக தலைமை அலுவலகம் அருகே நடந்த தாக்குதலில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் ஜாமினில் இன்று வெளியே வந்தனர். அவர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று கட்சியினருடன் வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது ;

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் குழு மேல் குழு அமைத்து பயனில்லை. , சிபிஐ விசாரணை நடத்துவதில் என்ன பிரச்சினை . சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசு ஏன் தயங்குகிறது என தெரியவில்லை.சிபிஐ விசாரணை வேண்டும். தாயின் நியாயமான வேதனை உணர்வு கேள்விக்கு பதில் திமுக அரசால் சொல்ல முடியவில்லை

திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு அனைத்தும் பாழாகிவிடும். அதைதான் கோர்ட்டு ,தமிழகம் அமைதிப்பூங்கா என்ற பெயரை புரட்டிப்போட்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா என்று கருத்து தெரிவித்துள்ளது

கள்ளக்குறிச்சியில் நடந்ததுபோல் இதுவரை ஒரு கலவரம் வந்து யாருமே பார்த்திருக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒரு கலவரம் வந்திருக்கிறது என்றால், அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டியது,முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நாங்கள் தான் அதிமுக. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கணக்கு வழக்குகளை அவரே கையாள்வார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. திமுக மக்களுக்கு சுமையை சுமத்துகிறது .வருகிற25ம் தேதி மின்கட்டணம் சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.


Next Story