தி.மு.க.ஆட்சி ஏற்படும்போதெல்லாம் ஜவ்வாதுமலை வளர்ச்சியடைகிறது


தி.மு.க.ஆட்சி ஏற்படும்போதெல்லாம் ஜவ்வாதுமலை வளர்ச்சியடைகிறது
x

தி.மு.க.ஆட்சி ஏற்படும்போதெல்லாம் ஜவ்வாதுமலை வளர்ச்சியடைகிறது என அமைச்சர் எ.வ.வேலு பெருமிதத்துடன் கூறினார்.

திருவண்ணாமலை

திராவிட மாடல் ஆட்சி

கோடை விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

அமைச்சர் உதயநிதி வருகையால் ஜவ்வாதுமலை திருவிழா கோலம்பூண்டு உள்ளது. இந்த மண்ணில் சாமையும், வரகும் தான் விளைவிக்கப்படுகிறது. கூழை அருந்தி வந்த மக்களுக்கு சாதமும், சிற்றுண்டியும் வழங்கியது திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாடு முதல்- அமைச்சருக்கு உறுதுணையாக இருந்து திறப்பு திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கும் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மலைவாழ் மக்களுக்கு சிறப்பு திட்டங்களை அதிகளவில் வழங்க வேண்டும். தி.மு.க. ஆட்சி எப்போது எல்லாம் வருகின்றதோ அப்போது தான் ஜவ்வாதுமலையில் வளர்ச்சி ஏற்படுகின்றது.

கோலப்பன் ஏரி, கோவிலூரில் உள்ள சிவன் கோவில் திருப்பணிகள் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க. அரசு தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.பி.-எம்.எல்.ஏ.

விழாவில் எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, விஷ்ணுபிரசாத், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, அம்பேத்குமார், ஜவ்வாதுமலை ஒன்றியக்குழு தலைவர் ஜீவாமூர்த்தி, மாவட்ட வன அலுவலர் அருண்லால், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஜவ்வாதுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், ரேணுகோபால், கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன், ஜவ்வாது மலை பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் வெள்ளையன், துணைத் தலைவர் செல்வமணி, செயலாளர் ரமேஷ்பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story