ரூ.5 ஆயிரம் கோடிக்கு கணக்கு எங்கே?- தமிழக அரசுக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி


ரூ.5 ஆயிரம் கோடிக்கு கணக்கு எங்கே?- தமிழக அரசுக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி
x

உயர்நிலைக் குழு கூட்டத்திற்கு பிறகு வெள்ள நிவாரண நிதி தமிழக அரசுக்கு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார்.

சென்னை,

வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு, நிதி ஒதுக்காமல் புறக்கணித்துவிட்டதாக தமிழகத்தில் ஆளும் தி.மு.க குற்றம் சாட்டி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது. பா.ஜ.கவும், தி.மு.கவும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம், தமிழக அரசுக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறதே? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதலளித்து கூறியதாவது:- தமிழகத்தில் மிக்ஜம் புயல், மழை வந்தவுடனே ரூ.950 கோடி நிதி தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இருந்து தமிழக பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.

வெள்ள பாதிப்புகளை சீர்செய்ய சென்னைக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி முன்கூட்டியே வழங்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்தி இருந்தால் சென்னை நகரம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்காது. அந்த ரூ.5 ஆயிரம் கோடி எப்படி செலவிடப்பட்டது? அதற்கான கணக்கு எங்கே? தமிழக அரசு அதை கூற வேண்டும்.ஒரு பைசா கூட மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை என்று சொல்லக் கூடாது. மேலும் வெள்ள நிவாரண நிதி, உயர்நிலைக் குழு கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசுக்கு வழங்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story