தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி ? - சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை..!


தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி ? - சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை..!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 15 July 2022 3:46 AM GMT (Updated: 15 July 2022 4:22 AM GMT)

தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சேலம்,

தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முதுகலை வரலாறு மாணவர்களுக்கான 2-வது செமஸ்டர் தேர்வில் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், வினாத்தாள்கள் வெளிக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலம் தயாரிக்கப்படுவதாகவும் வினாத்தாள்களை சரிபார்த்தால் கசிந்துவிடும் என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர், இந்த கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறு தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story