டெண்டர் விட்டு கொண்டிருக்கும்போதே டெண்டர் பெட்டியை தூக்கி ஓட்டம் - நாமக்கல்லில் பரபரப்பு

நாமக்கல் பகுதிக்கான பெட்டியில், சிலர் தங்கள் விண்ணப்பத்தை மட்டும் போட்டு விட்டு, வேறு யாரையும் போடவிடாமல் பெட்டியைத் தூக்கி கொண்டு அவசரமாக வெளியேறி விட்டனர்.
நாமக்கல்,
பரமத்தி ஒன்றியங்களில் உள்ள ரேசன் கடைகளுக்கு வாடகை லாரிகளில் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான ஒப்பந்த ஏலம், இன்று நடைபெறுவதாக இருந்தது. சங்க அலுவலகத்தில் டெண்டர் விண்ணப்பம் போடுவதற்கான பெட்டி, ஒப்பந்ததாரர்கள் கேட்டுக் கொண்டதால் தாமதமாக வைக்கப்பட்டது.
அதில், நாமக்கல் பகுதிக்கான பெட்டியில், சிலர் தங்கள் விண்ணப்பத்தை மட்டும் போட்டு விட்டு, வேறு யாரையும் போடவிடாமல் பெட்டியைத் தூக்கி கொண்டு அவசரமாக வெளியேறி விட்டனர்.
அவர்களை அதிகாரிகள் தடுக்கவில்லை எனவும், டெண்டரில் பங்கேற்க ஒரு சிலரை மட்டுமே அனுமதித்தாகவும் மற்றவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் நாமக்கல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, டெண்டரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
Related Tags :
Next Story