முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டிவிட்டர் பதிவை ராணுவம் நீக்கியது ஏன்? - கனிமொழி எம்.பி. கேள்வி


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டிவிட்டர் பதிவை ராணுவம் நீக்கியது ஏன்? - கனிமொழி எம்.பி. கேள்வி
x
தினத்தந்தி 3 Aug 2023 3:15 AM GMT (Updated: 3 Aug 2023 4:58 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டிவிட்டர் பதிவை ராணுவம் நீக்கியது ஏன்? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தை சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பெண்களால் முன்னேற கூடும் - நம் வண்தமிழ் நாடும் எந்நாடும். மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் சிறப்பான சாதனைக்கு வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை சேர்ந்த முதல் பெண்மணி மேஜர் ஜெனரல் பதவியை எட்டியது மிகச்சிறந்த மைல்கல். அவரின் பணிக்கும் சேவைக்கும் ஆர்வத்திற்கும் மரியாதைக்குரிய வணக்கங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுபகிர்வு செய்து வெளியிட்டிருந்த இந்த வாழ்த்து செய்தியை இந்திய ராணுவம் நீக்கியுள்ளது.

இந்த குறித்து திமுக எம்.பி. கனிமொழி வெளிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை ராணுவம் ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story