பிரதமர் விழாவில் பங்கேற்காதது ஏன்? - அண்ணாமலை விளக்கம்
தலைவராக இருக்கும்வரை இப்படிதான் செயல்படுவேன் என்று அண்ணாமலை கூறினார்.
சென்னை,
திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக பாஜக அண்ணாமலை அறிவித்தார். அதன்படி இன்று அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது பிரதமர் மோடி சென்னை வந்த போது அவருடன் ஏன்? பங்கேற்கவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து அண்ணாமலை கூறியதாவது:-
நான் சென்னை வரும்போது நீங்கள் வரவேண்டாம், கர்நாடக தேர்தல் பணிகளை கவனியுங்கள் என பிரதமர் மோடி கூறினார் அதனால் தான் சென்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. தினந்தோறும் பார்ப்பதால் தமிழ்நாட்டில் வைத்து பிரதமர் மோடியை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை" என கூறினார்.
அதனை தொடர்ந்து அண்ணாமலை பேசுகையில், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024-ம் ஆண்டுக்குள் வெளியிடப்படும். ஊழலை எதிர்க்க ஆரம்பித்தால் ஒருகட்சியை மட்டும் எதிர்க்க முடியாது; மொத்தமாக எதிர்க்க வேண்டும்.
தலைவராக இருக்கும்வரை இப்படிதான் செயல்படுவேன். யார் தவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியம் எனக்கவில்லை. என்னை மாற்ற நினைத்தால் டெல்லிக்கு சென்று என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள்.
ஊழலுக்கு எதிராக ஜூலையில் "என் மண், என் மக்கள்" என பாதயாத்திரை நடைபெற உள்ளது என அண்ணாமலை கூறினார்.