சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை


சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை
x

சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை,

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.

இதன்படி சென்னையை அடுத்த பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், செம்பரம்பாக்கம், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதே போல் ஆவடி, திருமுல்லைவாயல், திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.


Next Story