சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை


சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
x

வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, தரமணி, வேளச்சேரி, ராயப்பேட்டை, மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


Next Story