ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மனைவி: கீழே தள்ளிவிட்டு கொன்ற கணவன்..!


ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மனைவி: கீழே தள்ளிவிட்டு கொன்ற கணவன்..!
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மனைவியை, கணவன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமா தேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இருவரும் கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், படப்பை அருகே டைல்ஸ் ஓட்டும் பணி செய்து வந்த சுந்தர் என்பவருடன் பூமா தேவிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆண் நண்பர் சுந்தருடன், பூமா தேவி இரு சக்கர வாகனத்தில் செல்வதை கண்ட சிவா ஆத்திரமடைந்துள்ளார். இதில், அவர்களை பின் தொடர்ந்து சென்ற சிவா, இரு சக்கர வாகனத்தில் இருந்து மனைவியை கீழே தள்ளி விட்டதில், பூமா தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் பூமாதேவியின் கணவர் சிவாவை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story