சேரம்பாடி அருகே வனத்துறையினர் அமைத்த குடிநீர் தொட்டியில் காட்டு யானைகள் குளித்து கும்மாளம்
சேரம்பாடி அருகே வனத்துறையினர் அமைத்த குடிநீர் தொட்டியில் காட்டு யானைகள் தண்ணீர் குடித்ததோடு குளித்து கும்மாளமிட்டன.
பந்தலூர்
சேரம்பாடி அருகே வனத்துறையினர் அமைத்த குடிநீர் தொட்டியில் காட்டு யானைகள் தண்ணீர் குடித்ததோடு குளித்து கும்மாளமிட்டன.
கசிவுநீர் குட்டைகள்
பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலைதோட்டம் ரேஞ்ச்எண் 3 அருகே உள்ள வனப்பகுதி மற்றும் கோட்டமலை உள்பட 7 இடங்களில் கோடை காலத்தில் வனவிலங்குகள் நீரைத் தேடி ஊருக்குள் வருவதை தவிர்க்கும் பொருட்டும், வனவிலங்குகள் தாகம் தீர்க்கவும் மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் தலைமையில் புதிய தடுப்பணைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகள், குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது.
மேலும் பழைய கசிவுநீர் குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் பராமரிக்கப்பட்டுள்ளது. தற்போது வனத்துறை மூலம் கட்டப்பட்டுள்ள நீர் நிலைகளில் நீர் நிரம்பி யானை உள்ளிட்ட விலங்குகள் நீர் நிலைகளில் தண்ணீர் குடிப்பதும், குளிப்பதும் அதிகம் காணப்படுகிறது.
குளித்து கும்மாளமிட்ட காட்டு யானைகள்
இந்தநிலையில் நேற்று அந்த பகுதிகளில் சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப்பாளர்கள் ஞானமூர்த்தி குணசேகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள், கசிவுநீர் குட்டையில் காட்டு யானைகள் தண்ணீர் குடித்ததோடு குளித்து கும்மாளமிட்டது. இந்த யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனவிலங்குகள் தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகள், தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது. இதனால் வனவிலங்குகளின் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது. மேலம், வனவிலங்குகள் நீர்தேவைக்காக ஊருக்குள் வருவது தவிர்க்கப்பட்டு மனித- வனவிலங்கு மோதல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. என்றனர்.