வன உயிரின புகைப்பட கண்காட்சி


வன உயிரின புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 5 Oct 2023 8:30 PM GMT (Updated: 5 Oct 2023 8:30 PM GMT)

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வன உயிரின புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வன உயிரின புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது.

வன உயிரின வார விழா

ஊட்டி அரசு கலை கல்லூரி வனவிலங்கு உயிரியல் துறை சார்பில் யானை திருவிழா மற்றும் வன உயிரின வார விழாவை முன்னிட்டு வன உயிரின புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சனில் தலைமை தாங்கினார்.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் நீலகிரி உயிர்சூழல் மண்டலத்தில் எடுக்கப்பட்ட வனவிலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரங்கள் உள்ளிட்டவற்றின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றை கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பார்வையிட்டனர். இந்த கண்காட்சி இன்று(வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

வரையாடு தினம்

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறுகையில், ஆண்டுதோறும் அக்டோர் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை வன உயிரின வார விழா கடைபிடிக்கப்படுகிறது. உயிர் சுழல் மண்டலத்தில் வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பது ஒவ்வொருவரது கடமையாகும். தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் வரையாடு தினம் கொண்டாடப்பட உள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் இந்திய வன உயிரின அறக்கட்டளை நிர்வாகி திரேஸ் ஜோசி, வனவிலங்கு உயிரியல் துறை தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story